முகப்பு
செய்திகள்

தமிழக முதல்வருக்கு நடிகர் விஷால் கடிதம்!

அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கிச் சிறப்புடன் ஆட்சி செய்துவரும் தாங்கள் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் கடன்களை...

Updated On : 20 ஜூன், 2017 at 4:23 PM
பகிர்:

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று நடிகர் விஷால் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

விவசாயிகளின் பிரச்னை குறித்து நடிகர் விஷால் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கிச் சிறப்புடன் ஆட்சி செய்துவரும் தாங்கள் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டுகிறேன். 

Advertisement

நமது அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசத்திலும் மஹாராஷ்டிராவிலும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது. நமது அண்டை மாநிலங்கள் செய்ததுபோல தமிழ்நாட்டின் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என விஷால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.