செய்திகள்

ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் படத்துக்கு வரிவிலக்கு!

எழில்

ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். 

வனமகன் படம் வருகிற வெள்ளியன்று வெளிவருகிறது. இதையடுத்து யு சான்றிதழ் பெற்ற இப்படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சரக்கு-சேவை வரியான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி.),  ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்த் திரையுலகுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை இந்த ஜிஎஸ்டியால் ரத்து செய்யப்படவுள்ளது. தமிழில் தலைப்பு, யு சான்றிதழ் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளைப் பின்பற்றும் தமிழ்ப் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பல மாற்றங்கள் தமிழ்த் திரையுலகில் வரவுள்ளன.

இதனால் ஜூலை 1-க்கு முன்பு வெளியாகும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்கிற நிலையில் வனமகன் படம் தமிழக அரசிடமிருந்து வரிவிலக்கு பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT