செய்திகள்

ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படத்தின் புதிய டிரெய்லர்!

2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

எழில்

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017ம் வருடம் அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இந்த நான்குப் பதிப்புக்கும் சொந்தக் குரலில் பேசியுள்ளார் ஸ்ரீதேவி. 

2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இதனால் தற்போது மாம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாம் படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT