முகப்பு
செய்திகள்

என் மகன் ஹீரோவாகிறான்! நடிகை அம்பிகா பேட்டி

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுககளில் ஹீரோயினாக வெற்றி கொடி கட்டியவர் நடிகை அம்பிகா.

Updated On : 23 ஜூன், 2017 at 1:03 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:46 PM

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் ஹீரோயினாக வெற்றிக் கொடி கட்டியவர் நடிகை அம்பிகா. அவரது மகன் ராம் கேஷவ் விரைவில் திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என்ற தகவலை அம்பிகா தெரிவித்தார். 

‘என்னுடைய மகன் நடிப்பதற்கு தயாராகி வருகிறான். தமிழ் அல்லது மலையாளத்தில் ஹீரோவாக அவனது முதல் படம் இருக்கும். இப்போதைக்கு இவ்வளவு விவரங்களை தான் சொல்ல முடியும் நிலையில் உள்ளேன்’ என்றார் அம்பிகா.

54 வயதான அம்பிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர். 1978-ல் வெளிவந்த 'சமயமாயில்லா போலும்’ எனும் மலையாளத் திரைப்படத்தில் 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் அம்பிகா.

Advertisement

மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதன் பிறகு நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் அதே காலகட்டத்தில் நடித்து பிஸி நடிகையாக திகழ்ந்தார். இயல்பான நடிப்பால் திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தைப் பிடித்தார். 1980 மற்றும் 1990 -களில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் சேர்ந்து நடித்தார். தற்போது அம்மா வேடங்களில் நடித்து வரும் அம்பிகா இதுவரை 200 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகன் ராம் கேஷவிற்கு ஒரு சிறந்த அறிமுகத்தைத் தருவேன் என்றார் அம்பிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.