முகப்பு
செய்திகள்

வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி! இசை - பிரேம்ஜி!

சத்யராஜ், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ்...

Updated On : 24 ஜூன், 2017 at 12:45 PM
பகிர்:

சென்னை 28-2 படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு பார்ட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் தமிழ் சினிமா கடந்த சில வருடங்களாக அனுபவித்து வந்த வரிச்சலுகை ரத்தாகிறது. இதையடுத்து பழையபடி தமிழ்த் திரையுலகில் ஆங்கிலத் தலைப்புகள் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வெங்கட் பிரபுவும் தனது புதிய படத்துக்கு பார்ட்டி என்று பெயரிட்டுள்ளார்.

சத்யராஜ், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது. வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக இசையமைக்கும் யுவனுக்குப் பதிலாக பிரேம்ஜி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.