FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் சுத்தம் செய்ய தனிக்கவனம் அவசியம்

இனிய இல்லம் - ஏஎன்ஐ
பகிர்:

வீட்டின் தரைப் பகுதிக்கு ஏற்ப, அதனை சுத்தம் செய்வதில் தனிக்கவனம் செலுத்துவது அவசியமாகிறது. மற்ற தரைகளை விட மார்பிள் கல் தரைகளுக்கு என தனியாக திரவங்கள் தற்போது விற்பனைக்க வந்துவிட்டன.

பார்க்க மிக அழகாகவும், பளீச்சென்ற தோற்றத்தையும் கொடுக்க பல காலமாக மார்பிள் கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தவறான பொருள் அல்லது ரசாயனங்களை பயன்படுத்தினால் மிகுந்த சேதம் ஏற்படவும், அதன் தோற்றம் மங்கவும் வாய்ப்புண்டு.

Advertisement

Advertisement

சுத்தமாகப் பெருக்கிய பிறகே தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். அவ்வப்போது துடைத்து எடுப்பது மிகவும் அவசியம்.

மார்பிள் தரையில் சாதாரண கறை படிந்தால் சோப்புக் கரைசலை பயன்படுத்தி கழுவலாம்.

மங்கல் தோற்றம் இருந்தால் தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி தேய்த்தாலும் தரை பளிச்சிடும்.

எண்ணெய் கறைப் படிந்தால் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை கரைத்து தரையை துடைத்தால் பளீச்சென மாறி விடும்.

விடாப்பிடியான கறை என்றால் வினிகர் உபயோகிக்கவும். வெள்ளை வினிகரை துணியில் நனைத்து கறைமீது தேய்க்க வேண்டும்.

சில வேலைகளில் சாமான் தேய்க்க வைத்திருக்கும் டிஷ்வாஷ் திரவம் பயன்படுத்தினாலும் மார்பிள் பளிச்சிடும்.

கண்டிப்பாக மார்பிள் கறையைப் போக்க ஆசிட் பயன்படுத்தக் கூடாது. அது மார்பிள் பாலிஷை சிதைத்து சொரசொரப்பாக்கும்.

தரமற்ற, கடினமான சோப்புக் கரைசலையும் பயன்படுத்தக் கூடாது.

முதல் முறை சோப்பு போன்ற திரவம் சேர்த்து தரைப் பகுதியை சுத்தம் செய்திருந்தால், பிறகு மீண்டும் சுத்தமான துணியைக் கொண்டு நல்ல தண்ணீரில் நனைத்து தரையை சுத்தம் செய்ய வேண்டும். சோப்பு போட்டு அப்படியே விடக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments