FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வீட்டைப் பராமரிப்பதற்கான வார அட்டவணை!

வீட்டை பராமரிப்பதற்கான பொதுவான வார அட்டவணை பற்றி..

House - Center-Center-Coimbatore
பகிர்:

பொதுவாக ஒரு வீடு தூய்மையாக இருக்க வேண்டும் என்றால், அந்த வீட்டில் வாழும் அனைவருமே அதற்காக உழைக்க வேண்டும் அல்லது மெனக்கெட வேண்டும்.

இல்லையென்றால், ஒரு வீட்டை ஒரே ஒருவர் சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தால், ஒரு சுழற்சி முடிவதற்குள், பழையபடி மாசடைந்துவிடும்.

எப்படி சுத்தப்படுத்தினாலும் எளிதாக மாசடைந்து விடுகிறதே, எப்போது எதை செய்வது என்பது தெரியாமல் குழப்பமாக இருக்கிறதே என்று சொல்பவர்களுக்காக, பலரும் இணையத்தில் தேடி பயன்படுத்திப் பார்த்து சூப்பராக இருக்கிறது என்று சொன்ன சில பொதுவான அட்டவணைகளைப் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

திங்கள்கிழமை என்றால்..

வீட்டை பெருக்கி, சுத்தமாக துடைத்து வைப்பது

கழிப்பறைகளை சுத்தம் செய்வது

செவ்வாய்க்கிழமைகளில்

கட்டில், மெத்தைகளில் அழுக்கடைந்த போர்வைகள், தலையணை உறைகளைத் தோய்க்கலாம்

வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் டவல்களை அனைத்தையும் ஒன்றாகப் போட்டு துவைத்து வைக்கலாம்

புதன்கிழமை என்றாலே

படிகட்டுகள், வெளி வாயில்களை பெருக்கி சுத்தப்படுத்தலாம்

வீட்டின் சிங்க் உள்ளிட்டவற்றில் இருக்கும் தண்ணீர் குழாய்களை தேய்த்து பளபளவென ஆக்கலாம்.

வியாழக்கிழமைதோறும்

ஃபிரிட்ஜில் தேங்கியிருக்கும் பழையவற்றை வெளியேற்றலாம்

வீட்டில் எங்கெல்லாம் தேவையில்லாத பொருள்கள் இருக்கிறதோ அன்றைய தினமே வெளியேற்றிவிடலாம்.

வெள்ளிக்கிழமையன்ற

பூஜையறையை சுத்தம் செய்வது, பூஜையறைக்கான சாமான்கள் மற்றும் அலமாரிகளை சுத்தம் செய்யலாம்

வீட்டின் பீரோவில் இருக்கும் துணிகளை நன்றாக மடித்து வைக்கலாம்.

அலங்காரப் பொருள்கள், நகைகளை அடுக்கி வைக்கலாம்

சனிக்கிழமை என்றால்..

சமையலறைக்கு சற்று கூடுதல் கவனம் கொடுத்து சுத்தப்படுத்தலாம்.

தேவையற்ற சாமான்களை பரணில் ஏற்றலாம்.

நாளிதழ் போன்றவற்றை கடைக்குப் போடலாம்

இதுபோன்றவற்றை வாரந்தோறும் செய்துவந்தால் வீடு ஓரளவுக்கு சுத்தமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments