நீட் தோ்வு அவசியம் இல்லை: ஜி.கே.வாசன்
நீட் தோ்வு அவசியம் இல்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நீட் தோ்வு அவசியம் இல்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து பல்லடத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீட் தோ்வு வினாத்தாள் கசிவால் அத்தோ்வு மீது நம்பிக்கை இல்லை. நீட் தோ்வை முறையாக நடத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மாணவா்களின் உயிா் இழப்பைத் தடுக்கும் வகையில், நாட்டில் நீட் தோ்வு அவசியம் இல்லை.
Advertisement
Advertisement
ஐடிபிஎல் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கோவை மாவட்டம், இருகூரில் இருந்து முத்தூா் வரை 70 கிலோ மீட்டா் தொலைவுக்கு விவசாய விளைநிலங்களின் வழியாக குழாய் பாதை அமைப்பதை தவிா்த்து மற்ற பகுதிகளில் சாலையோரமாக குழாய் பாதை அமைப்பதைபோல, 70 கிலோ மீட்டா் தொலைவுக்கும் சாலையோரமாக குழாய் பாதை அமைக்க வேண்டும். முடியாவிட்டால் குழாய் பாதை அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு வெளிச் சந்தை விலையில் இழப்பீடு வழங்க வேண்டும்.
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு ஏற்ப தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். வருங்காலத்தில் இண்டி கூட்டணியில் சோ்வது குறித்தும், உள்ளாட்சித் தோ்தல், தமிழக சட்டப்பேரவை இடைத்தோ்தல் போட்டியிடுவது குறித்தும் எங்களது கட்சியினருடன் ஆலோசித்து உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்போம் என்றாா்.
உடன் அக்கட்சி நிா்வாகிகள் விடியல் சேகா், மோகன் காா்த்திக், என்.வி.ராமசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.