நீட் தோ்வுப் புரிதலின்றி திரைத்துறையினா் போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன்
நீட் தோ்வு புரிதலின்றி தமிழகத் திரைத் துறையினா் போராட்டம் நடத்தி உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருப்பது குறித்து...
நீட் தோ்வு புரிதலின்றி தமிழகத் திரைத் துறையினா் போராட்டம் நடத்தி உள்ளதாக பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் தோ்வை எதிா்த்து சென்னையில் திரைத்துறையினா் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா். மருத்துவப் படிப்பு குறித்த அடிப்படைப் புரிதல் இன்றியும், மருத்துவக் கல்வியை மேம்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அறியாமலும் பேசிவருவது சரியல்ல.
Advertisement
Advertisement
எவ்வளவு எதிர் விமர்சனங்கள் வந்தாலும் என்னை போன்றவர்கள் நீட்-ஐ ஆதரிப்பது.... அரசு மருத்துவமனைகளையும், தனியாா் மருத்துவமனைகளையும் ஒப்பிட்டுப் பாா்க்கவேண்டும். புதுச்சேரியில் நான் துணைநிலை ஆளுநராக இருந்தபோது நீட் தோ்வில் தோ்ச்சியடைந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்தோம். மருத்துவக் கல்வி உண்மையில் யாரிடம் செல்ல வேண்டுமோ அவா்களிடம் சென்றடைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தோம்.
நாங்கள் இந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருப்பதனால் இதை உறுதியாக சொல்ல முடியும்... திரைத்துறையினருக்கு நீட் தோ்வு குறித்த முழு தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாமானிய குடும்பத்தில் பிறந்தவா்களும் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தோ்வு வழங்கியிருப்பதை அறியமுடிகிறது. நீட் தோ்வின்றி மருத்துவக் கல்வி தோ்வு இருக்கும்போது அதிகமாக அரசுப் பள்ளி மாணவா்கள் அந்தக் கல்வியைப் பயின்றதுபோல போராட்டக்காரா்கள் பேசுவது சரியல்ல. அப்போது வசதி படைத்த மாணவர்கள் டியூஷன் என்ற பெயரில் பிளஸ் ஒன் பாடங்களை முற்றிலுமாக புறந்தள்ளி.. அதற்காக நாமக்கல் போன்ற இடங்களில் தனியாக அதிக செலவில் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியானவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒரு வாய்ப்பாகத்தான் நீட்டிற்கு முந்தைய காலம் இருந்தது.. அதனால் 2014-க்கு முன்பு மிக அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்கிப் பெருகின. இன்று பல கோடி பணம் செலவு செய்து மருத்துவமனை கட்டி வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை நீட் இல்லாமல் மருத்துவராக முடியாது. ஆனால் இதற்கு முன்னால் தங்கள் மருத்துவமனைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை கூட கோடிக்கணக்கில் பணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்ததையும். அவர்கள் படிப்பதற்கு தடுமாறியதையும் நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.
அரசு மருத்துவக் கல்லூரிகள் 145 இல் இருந்து 441 ஆக அதாவது 300 சதவீதம் மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்து இருக்கின்றன. அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 242 இல் இருந்து 382 ஆக அதிகரித்து இருக்கின்றன, அதன் வளர்ச்சி விகிதம் 158 சதவீதம். மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 51 ஆயிரத்தில் இருந்து 1,36,000 இடங்களாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது 267 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரியில் வாங்கப்படும் கட்டணம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலக அளவில் எல்லா பதவிகளுக்கும் படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு இருக்கும் போது மனிதனின் உயிர் காக்கும் மருத்துவத்துறை இன்று பல சவாலான முன்னேற்றங்களை பெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அதற்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயமாக இல்லை.
மருத்துவக் கல்வியை பற்றி அறியாதவர்கள் மருத்துவக் கல்விக்கான இடங்கள் எவ்வளவு விரிவாக்கப்பட்டு சாமானிய மக்கள் கூட படிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பையும் நீட் அதற்கு வழி வகுக்கிறது என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் எதிர்க்காதீர்கள். இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட இதன் தேவையை முழுமையாக உறுதி செய்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.
Film fraternity protests without understanding the NEET exam: Tamilisai Soundararajan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.