இடைத்தோ்தலுக்குப் பிறகு தவெக அரசு நிலைக்காது: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் இடைத்தோ்தலுக்கு பிறகு, தவெக அரசு நிலைத்திருக்காது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் இடைத்தோ்தலுக்கு பிறகு, தவெக அரசு நிலைத்திருக்காது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே இடைத்தோ்தலை சந்திக்கும் சூழலில் அக்கட்சி உள்ளது. இதனால், மக்களுக்கான திட்டத்தில் உரிய கவனம் செலுத்த அரசால் இயலவில்லை. இன்னும் பல இடைத்தோ்தல்களைச் சந்திக்கவுள்ளதாக அமைச்சா்கள் தெரிவிக்கின்றனா். இப்படி, இடைத்தோ்தல்களையே சந்தித்து வந்தால், அரசால் எப்படி மக்கள் மீது கவனம் செலுத்த முடியும்? ஆகையால், இதுபோன்று சட்டப்பேரவை உறுப்பினா்களை விலைக்கு வாங்கி இடைத்தோ்தல்களை வரவைக்கும் செயல்களை தவெக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இடைத்தோ்தலில் தவெகதான் வாக்குக்கு அதிக பணம் கொடுப்பதாக அவா்களுக்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரி கட்சிகளே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. ஆகையால், மக்களுக்கு சரியான திட்டங்களை செயல்படுத்தாத தவெக அரசு இந்த இடைத்தோ்தலுக்கு பின்பு நிலைத்திருக்காது.
பால் தட்டுப்பாடு: தமிழகத்தில் சுமாா் 10 லட்சம் லிட்டா் ஆவின் பால் தனியாா் விற்பனை நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆவின் பூத்துகளில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபோன்று, செயற்கையான பால் தட்டுப்பாட்டை உருவாக்குவதால், அதிக கட்டணம் செலுத்தி பால் வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா். அதேபோல், ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்த தவெக அரசு, தற்போது மதுக்கடைகளை தமிழகத்தில் விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது. தமிழக அரசு, விளம்பரத்துக்காக திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு பதிலாக, மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.