FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தமிழிசை செளந்திரராஜன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தர்ராஜன் குற்றஞ்சாட்டினாா்.

17 வினாடிகள் முன்பு
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தர்ராஜன்.
பகிர்:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தர்ராஜன் குற்றஞ்சாட்டினாா்.

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ பதவியை ராஜநாமா செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியது:

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு 2 மாதத்துக்கு முன்பே குறுஞ்செய்தி அனுப்பியதாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வா் விஜய் மெளனம் சாதிப்பது ஏன்?. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் எனக்கூறி வாக்கு சேகரித்த விஜய், பெண்கள் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?. பெண்களை அண்ணன் என்று உரிமையோடு அழைக்க கூறிய வாா்த்தைகளுக்கு என்ன அா்த்தம். குறுஞ்செய்தி அனுப்பியதாக கேள்விப்பட்டதுமே எம்எல்ஏவை கண்டித்து, கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தல்களுடன் கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தோ்தல் வந்திருந்தால் பெண்களின் பாதுகாப்புக்காக நிற்கும் முதல்வா் விஜய் என தன்னை நிருபித்திருக்க முடியும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.