முகப்பு
செய்திகள்

பிரபுதேவா நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள கார்த்திக் சுப்புராஜ் படம்!

இறைவி படத்துக்குப் பிறகு சத்தமில்லாமல் பிரபுதேவா நடிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:16 PM
பகிர்:

இறைவி படத்துக்குப் பிறகு சத்தமில்லாமல் பிரபுதேவா நடிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயண். ஒளிப்பதிவு - திரு. இப்படத்துக்கு மெர்குரி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

வித்தியாசம் என்னவென்றால் இது கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

முழுப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதால் விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.