செய்திகள்

திரையரங்கில் செல்போனில் வீடியோ எடுப்பதை சிம்பு ஊக்கப்படுத்துகிறாரா?

சநகன்

திரையரங்கில் வீடியோ எடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு திரையரங்கிலும் அறிவிப்புப்பலகை வைத்திருக்கிறார்கள். விஷால் போன்ற நடிகர்களும் திரையரங்கில் ஓடும் படத்தை வீடியோவாகப் பதிவு செய்வதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதுகுறித்த புகார்களைத் தீவிரமாகக் கையாள்கிறார்கள்.

ஆனால் இதே நடிகர்கள் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றால் இதை ஊக்கப்படுத்தவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான சிம்பு படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன். இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்து அதை ட்விட்டரிலும் வெளியிட்டு அஅஅ படக்குழுவினருக்கும் டேக் செய்து வருகிறார்கள்.

சிம்பு திரையில் தோன்றும்போதும் குறிப்பிட்ட காட்சிகளின்போதும் எந்தளவுக்குத் திரையரங்கில் வரவேற்பு பெறுகிறார் என்பதை வெளிப்படுத்த திரையரங்கில் ஓடும் படத்தை செல்போனில் பதிவு செய்துள்ளார்கள் ரசிகர்கள். அதை ட்விட்டரிலும் வெளியிட்டுவிடுகிறார்கள். நியாயமாக திரையுலகினர் இதுபோன்ற வீடியோக்களை அறவே புறக்கணிக்கவேண்டும். ஆனால் சிம்பு, யுவன் சங்கர் ராஜா போன்ற அஅஅ படக்குழுவினர் இதுபோன்ற வீடியோக்களை ரீட்வீட் செய்து உற்சாகப்படுத்துகிறார்கள்!

இதே உற்சாகத்தில் நாளை முழுப்படத்தையும் வீடியோவாக எடுத்தால் அதைக் கண்டிக்கும் உரிமை திரையுலகுக்கு இருக்குமா? இந்நிலையில் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய தவறை படக்குழுவினர் ஊக்கப்படுத்தாமல் இருக்கவேண்டும். இதுகுறித்து நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் திரையுலகினருக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT