செய்திகள்

3டி-யில் வெளியாகும் அவதார் 2 படத்தைக் கண்ணாடியின்றிக் காணலாம்!

எழில்

2009-ம் ஆண்டு வெளிவந்த படம், ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கிய அவதார். உலக அளவில் அதிக வசூல் செய்த படம் இது. ரூ. 18 ஆயிரம் கோடி ($2.79 பில்லியன்) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது. 

அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் கடந்த வருடம் அறிவித்தார். நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும் என்று கேம்ரூன் கூறினார். இப்போது அவதார் 2 குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 3டி படமாக உருவாக்கப்படும் அவதார் 2 மற்றும் அதன் ஏனைய பாகங்களை 3டி கண்ணாடியின்றி பார்க்கமுடியும் என்று கூறியுள்ளார் கேம்ரூன். இதற்குரிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய தொழில்நுட்பம் என்பதால் திரையுலகினர் இதன் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். செப்டம்பர் மாதம் அவதார் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.  

டெர்மினேட்டர் படத்தின் இரு பாகங்கள், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற படங்கள் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்த ஜேம்ஸ் கேம்ரூன், 3டி கண்ணாடியின்றி 3டி படம் பார்க்கமுடியும் என்றறிவித்திருப்பது திரையுலகில் பல்வேறு புதிய அனுபவங்களைத் தர முதற்காரணமாக அமையும் என்றே நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT