செய்திகள்

முதல் முறையாக மலையாளப் படத்தில் நடிக்கிறார் விஷால்!

DIN

விஷால் அடுத்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் ஆகும். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார் என்பது தெரிந்த செய்தி தற்போது அவர் ஒரு டாக்டராக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

படத்தின் இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் விஷாலுடைய தோற்றம் வித்தியாசமாக உள்ளது. தாடி வைத்து கண்ணாடி அணிந்த ஒரு கெட்டப்பில் காணப்படுகிறார்.  இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார். அதில் விஷாலின் கதாபாத்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நடிகர் விஷாலும் மோகன்லாலுடன் நடிப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுதான். இந்த படத்தில் மோகன்லால் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். ஹன்ஷிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT