செய்திகள்

ஒரே வாரத்தில் ரூ. 100 கோடி வசூலித்த தெலுங்குப் படம்!

எழில்

அல்லு அர்ஜூனின் டிஜே என்கிற Duvvada Jagannadham படம் வசூலில் மகத்தான சாதனை செய்துவருகிறது. 

அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே ராவ் ரமேஷ் நடிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. 

இந்நிலையில் இந்தப் படம் ஒரே வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. அல்லு அர்ஜூனின் படங்களில் அதிவேக வசூல் கண்ட படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. அல்லு அர்ஜூன் படங்களில் ரூ. 100 கோடியைத் தொடும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு Race Gurram and Sarrainodu ஆகிய படங்கள் ரூ. 100 கோடி வசூலைப் பெற்றுள்ளன.  

முதல் 7 நாள்களில் இந்தப் படம் ரூ. 102 கோடி வசூலை அடைந்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மட்டும் முதல் வாரத்தில் ரூ. 50.6 கோடியைப் பெற்றுள்ளது. இம்மாநிலங்களில் முதல் வாரத்தில் விநியோகஸ்தர்களுக்கு 50% லாபத்தை அளித்த நான்காவது படம் இது. இதற்கு முன்பு பாகுபலி இரு பாகங்கள், கைதி நெ.150 ஆகிய படங்கள் வசூலில் அதிக லாபத்தை அளித்தன.  

டிஜே படம் கர்நாடகத்தில் முதல் வாரம் ரூ. 10.5 கோடி வசூலித்துள்ளது. அதேபோல அமெரிக்காவிலும் முதல் வாரம் ரூ. 7 கோடியை அடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT