செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியால் உண்டான பிரிவு: நடிகை நிஷா உருக்கமான பதிவு!

உங்களை மீண்டும் பார்ப்பேன், அணைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் உள்ளேன்...

எழில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கலந்துகொண்டுள்ளதால் அவரைப் பிரிந்துவாடும் அவருடைய மனைவியும் நடிகையுமான நிஷா, சமூகவலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

என் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அந்தத் தருணத்தை இழந்துள்ளேன். சரியாகப் பாடவராவிட்டாலும் பாடும் அந்த அழகைத் தவறவிடுகிறேன். என் சந்தோஷத்துக்காக நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்வீர்கள். இந்த நாளில் என்னுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். என்னை விட்டு நீண்ட தூரம் இருப்பது என்னைக் கொல்கிறது. ஆனால் காத்திருப்பதில் ஒரு அர்த்தம் உண்டு என்பதால் இந்தக் காத்திருப்பும் எனக்குப் பலத்தை அளிக்கிறது. உங்களை மீண்டும் பார்ப்பேன், அணைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் உள்ளேன் என்று எழுதியுள்ளார்.

தன்னுடைய பிறந்தநாளையொட்டி இந்தப் பதிவை நிஷா எழுதியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷாவின் பிறந்தநாளைக் கொண்டாடினார் கணேஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT