முகப்பு
செய்திகள்

சகோதரர் மறைவுக்கு கமல்ஹாசன் உருக்கமான அஞ்சலி!

தனது சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் உருக்கமான அஞ்சலி தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

சென்னை; தனது சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் உருக்கமான அஞ்சலி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் உள்ள அவரது மகள் வீட்டில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

நடிகர் கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசன். இவர் கமலஹாசனின் இரண்டாவது சகோதரர். மேலும் இவர்தான் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். சந்திரஹாசன் மரணத்திற்கு தமிழ் திரைப்பட உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் மறைந்த சகோதரருக்கு நடிகர் கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான அஞ்சலிக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,'நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய்  அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு.  எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான்  நிரைவேற்றவில்லை' என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →