இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் விவேகம் படத்தின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துவருகிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் நடிக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத்.
அஜித்தின் வலிமையான உடற்கட்டை வெளிப்படுத்தும் முதல் போஸ்டர் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்புகைப்படத்தை இயக்குநர் சிவா வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.