முகப்பு
செய்திகள்

ஐஐஎஃப்ஏ: இறுதிச்சுற்று, தெறி, நானும் ரெளடிதான் படங்களுக்கு அதிக விருதுகள்!

லையாளத் திரையுலகுக்கான ஐஐஎஃப்ஏ விருதுகளில், சார்லி படம் அதிகபட்சமாக ஏழு விருதுகளை..

Updated On : 29 மார்ச், 2017 at 12:33 PM
பகிர்:

மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து தமிழில் வெற்றி பெற்ற படம், இறுதிச்சுற்று. சுதா கோங்கரா இயக்கிய படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

இந்தப் படம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ விருது (சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி) வழங்கும் விழாவில் அதிக விருதுகளைத் தட்டிச் சென்ற படங்களில் ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது. மலையாளத் திரையுலகுக்கான ஐஐஎஃப்ஏ விருதுகளில், சார்லி படம் அதிகபட்சமாக ஏழு விருதுகளைப் பெற்றது. 

சிறந்த நடிகை, சிறந்த நடிகர் உள்ளிட்ட 13 விருதுகளில் 3 விருதுகள் இறுதிச்சுற்று படத்துக்குக் கிடைத்தது. இதேபோல நானும் ரெளடிதான் படத்துக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த பாடகர், பாடகி என மூன்று விருதுகள் கிடைத்தன. தெறி படமும் சிறந்த இயக்குநர், சிறந்த வில்லன்,  சிறந்த குழந்தை நட்சத்திரன் என மூன்று விருதுகளைப் பெற்றது. அச்சம் என்பது மடமையடா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.