ஒரே நாளில் கவண் உள்ளிட்ட 6 படங்கள் ரிலீஸ்!
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள கவண், நயன்தாரா நடித்துள்ள டோரா...
ஒரே நாளில் பல படங்கள் வெளியாவது மீண்டும் தொடர்கிறது.
வருகிற 31-ம் தேதி 6 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள கவண், நயன்தாரா நடித்துள்ள டோரா, அட்டு, செவிலி, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, அரசகுலம் என 6 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
Advertisement
இதில் கவண், டோரா ஆகிய இரு படங்களுக்கும் அதிக வசூலும் கவனமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் - கவண். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்.
இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் "டோரா.' இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்கியுள்ளார். தனக்கென தனித்துவம்மிக்க கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த "அனாமிகா', "மாயா' போன்ற படங்களில் படத்தின் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஹீரோக்கள் வந்து போனார்கள். ஆனால் "டோரா' படத்தைப் பொறுத்தவரை நயன்தாராவுக்கு ஜோடியாக காதலர் அல்லது கணவர் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஒரு கொலையும், அதைச் சுற்றிய சம்பவங்களும்தான் கதை.
தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது. விவேக் - மெரிவின் இசையமைப்பில் உருவாகியுள்ளது இப்படம்.