செய்திகள்

கமல்ஹாசன் நடிக்கும் ஹாலிவுட் படம் ரிலீஸ் எப்போது?

தினமணி

ஜனவரி மாதம் சன்டான்ஸ் ஃபிலிம் பெஸ்டிவலில் இடம்பெற்ற ‘தி ஹீரோ’ எனும் திரைப்படம் ரசிகர்களின் பலத்த ஆதரவைப் பெற்றது. திரை ஆர்வலகர்கள் பாராட்டிய இப்படத்தின் கதை உத்தம வில்லன் கதை தான் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். அமெரிக்க இயக்குனர் ப்ரெட் ஹேலி (Brett Haley) இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவர் உத்தம வில்லன் கதையில் சில மாற்றங்களைச் செய்து 93 நிமிடங்கள் ஓடக் கூடிய வகையில் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். பட டைட்டிலில் முக்கிய கதையாசிரியர் என கமல்ஹாசன் பெயரை குறிப்பிட்டுள்ளார்கள். இத்திரைபப்டம் உலகமெங்கும் ஜூன் 9ம் தேதி வெளியாக உள்ளது. 

கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயம் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது. லைகா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், மூன்று வேடங்களில் கமல் நடிக்கும் மூ என்ற படம் தமிழில் தயாராக உள்ளது என்கிறது சினிமா வட்டாரம். தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் கமல். விஸ்வரூபம் முதல் பாகத்தைப் பார்த்த பிரபல  ஹாலிவுட் தயாரிப்பாளர்  பாரி எம் ஆஸ்பர்ன் கமலின் திறமையில் வியந்து அவரை ஹாலிவுட் படத்தில் நடிக்கும்படி அணுகியிருந்தார். உலகப் புகழ் பெற்ற லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்பர்ன் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் சில கதைகளை அவருக்குச் சொல்ல அதில் ஒரு கதையை தயா‌ரிக்க பாரி எம்.ஆஸ்பர்ன் ஒப்புக் கொண்டார். கமல் நடிக்கும் அப்படத்துக்கு 'ஆல் ஆர் கின்' என்ற பெயரிடப்பட்டது. இதற்கு தமிழில் யாவரும் கேளீர் என்று அர்த்தம்.

தி ஹீரோ படத்தின் மூலமும் தன்னுடைய ஹாலிவுட் பிரவேசம் மூலமும் கோலிவுட்டை ஹாலிவுட் வரை உயர்த்திய பெருமை உலக நாயகனுக்கு மட்டுமே உண்டு என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கமல் ரசிகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT