செய்திகள்

பாகுபலி 2: இந்தியாவில் முதல் வாரத்தில் ரூ. 530 கோடி வசூல்!

ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற இமயத்தை எட்டும் முயற்சியில்..

எழில்

பாகுபலி 2 படம் வெளிவந்து ஒருவாரமாகிவிட்டது.

இந்தியாவில் பாகுபலி 2, முதல் வாரத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் சேர்த்து ரூ. 534 கோடி வசூலித்துள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இந்த வசூலைக் கண்டதில்லை. 

அதேபோல ஹிந்தி பாகுபலி 2 முதல் வாரத்தில் ரூ. 247 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன்பு சுல்தான் (ரூ. 229 கோடி), டங்கல் (ரூ. 197 கோடி) ஆகிய படங்கள் சாதனை படைத்தன. இதை டப்பிங் படமான பாகுபலி 2 முறியடித்துள்ளது. இது நிச்சயம் மகத்தான சாதனை.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. ரூ. 180 கோடி பட்ஜெட்டில் உருவான பாகுபலி 1, ரூ. 650 கோடி வசூலித்தது. இந்நிலையில் ரூ. 250 கோடி செலவில் உருவான பாகுபலி 2, ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற இமயத்தை எட்டும் முயற்சியில் பயணித்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT