முகப்பு
செய்திகள்

பெண் குழந்தைக்குத் தந்தை ஆனார் துல்கர் சல்மான்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துல்கரின் மனைவி அமல் சுஃபியாவுக்கு...

Updated On : 6 மே, 2017 at 10:49 AM
பகிர்:

மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான், பெண் குழந்தைக்குத் தந்தை ஆகியுள்ளார். 

நேற்று துல்கர் நடித்த காம்ரேட் இன் அமெரிக்கா படம் வெளியானது. இந்நிலையில் அதேநாளில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துல்கரின் மனைவி அமல் சுஃபியாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் துல்கர். குழந்தை பிறந்த சமயத்தில் துல்கரின் தந்தையும் நடிகருமான மம்மூட்டி, தாய் சுல்ஃபாத், நஸ்ரியா நஸிம், விக்ரம் பிரபு ஆகியோர் மருத்துவமனையில் இருந்து அமலைக் கவனித்துக்கொண்டார்கள். 

துல்கர் - சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் அமல் சுஃபியா ஆகிய இருவருக்கும் 2011 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. இப்போது முதல் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.