முகப்பு
செய்திகள்

என் சம்பளம் குறித்த தகவல் உங்களுக்கு அவசியமில்லை: நடிகை பார்வதி

நான் எவ்வளவு சம்பளம் பெறுகிறேன் என்பது யாருக்கும் அவசியமில்லாதது. அது எனக்கும் தயாரிப்பாளருக்குமானது... 

Updated On : 6 மே, 2017 at 3:46 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:57 PM

மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துவரும் பார்வதி குறித்து சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதில், ரூ. 35 லட்சம் சம்பளம் வாங்கி வந்த பார்வதி, தற்போது டேக் ஆஃப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரூ. 1 கோடி சம்பளம் கேட்பதாகவும், இதையடுத்து மலையாளத் திரையுலகில் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகை என்கிற பெயரை அடைந்துவிட்டார் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து பார்வதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஊடகங்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறியதாவது: ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டால் அதையே எல்லோரும் வெளியிட்டுவிடுகிறார்கள். வருத்தமாக உள்ளது.  செய்தி வெளியிடுவதற்கு முன்பு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அது ஒன்றும் கஷ்டமில்லையே. இப்போதும் தவறான செய்திகளுக்குப் பதிலாக உண்மையான செய்திகளை வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

எந்த ஊடகத்துக்கும் என் சம்பளம் குறித்து நான் பேட்டி கொடுத்ததில்லை. யாரும் இதுகுறித்து என்னிடம் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் நான் சம்பளத்தை உயர்த்தியது குறித்து பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தகவலைச் சரிபார்த்து வெளியிட்டிருக்கலாமே!  

Advertisement

மேலும், நான் எவ்வளவு சம்பளம் பெறுகிறேன் என்பது யாருக்கும் அவசியமில்லாதது. அது எனக்கும் தயாரிப்பாளருக்குமானது. சம்பளப் பாகுபாடு குறித்து நான் பேசுவதாலேயே நீங்கள் இதுபோல செய்யக்கூடாது. நம் சமூகத்தில் உள்ள சம்பளப் பாகுபாடு என்பது விவாதிக்கப்படவேண்டியது. என்னைப் பற்றிய தவறான செய்திகளை நீக்கிவிடுங்கள். இன்னமும் உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று வருத்தத்துடன் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.