முகப்பு
செய்திகள்

நடிகை சாய் பல்லவியின் இரண்டாவது தெலுங்குப் படம் ஆரம்பம்!

ஃபிடா படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமான சாய் பல்லவி தற்போது...

Updated On : 6 மே, 2017 at 2:07 PM
பகிர்:

ஃபிடா படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமான சாய் பல்லவி தற்போது அடுத்தத் தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

தில் ராஜூ தயாரிப்பில், வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நானிக்கு ஜோடியாக எம்சிஏ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சாய் பல்லவி. 

ஃபிடா படம் பார்த்த தயாரிப்பாளர், இந்தப் படத்துக்கும் சாய் பல்லவி பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்துள்ளார். இன்று இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியது. 

Advertisement

பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் கரு என்கிற படம் மூலமாகத் தன்னுடைய முதல் தமிழ்ப் படத்தைச் சமீபத்தில் தொடங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.