செய்திகள்

சீனாவிலும் சிக்ஸர் அடித்த அமீர்கானின் டங்கல்!

எழில்

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

டங்கல் படம் கடந்த வாரம் வெள்ளியன்று சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 9000 திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு ஏறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). அங்கு டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் வெளியானது. 

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல முதல் மூன்று நாள்களில் டங்கல் படம் ரூ. 73 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. இதையடுத்து விரைவில் பிகே வசூலைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT