பாகுபலி 2 புயலுக்கு மத்தியில் வெள்ளியன்று வெளியாகும் 5 படங்கள்!
பாகுபலி 2 படம், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடி வசூலை அள்ளும் நிலைமையில் உள்ளது. இந்நிலையில்...
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:59 PM
தமிழ்நாட்டில் பாகுபலி 2 படத்தின் வசூல் இன்னும் ஓயாமல் சாதனை செய்துவருகிறது. தமிழ்நாட்டில் ரூ. 100 கோடி வசூலை அள்ளும் நிலைமையில் உள்ளது.
இந்நிலையில் பாகுபலி 2 வசூல் புயலை மீறி இந்த வாரம் வெள்ளியன்று 5 படங்கள் வெளியாகின்றன.
சரவணன் இருக்க பயமேன், லென்ஸ், எய்தவன், திறப்புவிழா, மர்மகாடு என இந்த 5 படங்களும் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி 2 படத்துக்கு மத்தியில் வெளியாகவுள்ளன.
Advertisement
மே 30-ம் தேதி தமிழ்த் திரையுலகம் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதால் இந்த மாதம் எந்தவொரு பெரிய நடிகர்களின் படமும் வெளிவராது.