செய்திகள்

சாமி - 2 வில் ஹாரிஸுக்கு பதில் தேவி ஸ்ரீ பிரசாத்!

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில்  உருவாகவுள்ள சாமி-2 படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் ...

IANS

சென்னை: இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில்  உருவாகவுள்ள சாமி-2 படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில், இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியான படம் 'சாமி'. வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் விக்ரம் சிறப்பாக நடித்த இந்த படமானது பெரும் வெற்றி பெற்றது.

தற்பொழுது 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரணடாம் பாகமானது தயாராகவுள்ளது. சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜே இந்த பாகத்திற்கும் இசையமைப்பார் என்று முதலில் தகவல் வெளியானது.

ஆனால் தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணையும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிதம்... விதி யாதவ்!

"துலாம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

கண் கவர் பொருங்கோட... மேகா!

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT