செய்திகள்

ரூ. 1500 கோடி வசூலைப் பெற்ற இரு படங்கள்: பாகுபலி 2 தயாரிப்பாளர் மகிழ்ச்சி!

பாகுபலி 2, டங்கல் என இரு படங்களும் ரூ. 1500 கோடி வசூலைப் பெற்றுள்ளன...

எழில்

பாகுபலி 2, டங்கல் என இரு படங்களும் ரூ. 1500 கோடி வசூலைப் பெற்றுள்ளன. இதுகுறித்து பாகுபலி 2 தயாரிப்பாளர் ஷோபு ட்விட்டரில் கூறியதாவது:

ஒருமுறை நிகழ்ந்தது மீண்டும் நிகழாது. ஆனால் இருமுறை நிகழ்ந்தது எனில் நிச்சயம் மூன்றாவது முறையும் நிகழும். (அல்கமிஸ்ட்-லிருந்து). இரு படங்கள் அடுத்தடுத்து ரூ. 1500 கோடியை வசூல் செய்துள்ளன. இது புதிய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இது நம் துறைக்கு நல்ல பலன்களை அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

சீனாவில் வெளியாவதற்கு முன்பு ரூ. 744 கோடி வசூலித்திருந்தது அமீர் கானின் டங்கல் படம். தற்போது சீன வெளியீட்டுக்குப் பிறகு டங்கல் படத்தின் வசூல் ரூ. 1500 கோடியைத் தாண்டிவிட்டது. தற்போது பாகுபலி 2 படத்தின் வசூல் கடந்த சனிக்கிழமை வரை ரூ. 1538 வசூல் செய்துள்ளது. இதையடுத்து சீனாவில் டங்கல் பெற்றுவரும் சூறாவளி வசூல் விரைவில் பாகுபலி 2 படத்தின் வசூலைத் தாண்டி விடும் என்று கணிக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

”வறுமையால் உறுப்பை விற்கும் குடும்பங்களின் மனநிலை..!” My Lord படம் குறித்து இயக்குநர் ராஜு முருகன்!

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT