செய்திகள்

பாகுபலி 2 படம், ரூ. 2000 கோடி வசூல் பெறும் என ரஹ்மான் நம்பிக்கை!

பாகுபலி 2 படம் தென்னிந்திய சினிமாவுக்குப் புதிய அடையாளத்தைத் தந்துள்ளது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

எழில்

பாகுபலி 2 படம் தென்னிந்திய சினிமாவுக்குப் புதிய அடையாளத்தைத் தந்துள்ளது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டுவருகிறது. விரைவில் ரூ. 2000 கோடியைத் தொடும் என்கிற எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பாகுபலி 2 படம் பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: ராஜமெளலி, கீரவாணி மற்றும் படக்குழுவினருக்கு... தற்போதுதான் சென்னையில் பாகுபலி 2 படம் பார்த்து முடித்தேன். ரூ. 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் தென்னிந்திய சினிமாவுக்குப் புதிய அடையாளத்தைத் தந்து புதிய கதவைத் திறந்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

”வறுமையால் உறுப்பை விற்கும் குடும்பங்களின் மனநிலை..!” My Lord படம் குறித்து இயக்குநர் ராஜு முருகன்!

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT