முகப்பு
செய்திகள்

காலா - ரஜினியின் எத்தனையாவது படம்? தனுஷ் ட்வீட்களால் உண்டான குழப்பம்!

ரஜினியின் 161-வது படம் என்று முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம், தற்போது 164-வது படமாக மாறியுள்ளது. 

Updated On : 25 மே, 2017 at 12:24 PM
பகிர்:

தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலா - கரிகாலன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

 இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28ம்தேதி தொடங்குகிறது.

 இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

Advertisement

இந்நிலையில் காலா படம் ரஜினியின் எத்தனையாவது படம் என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

ரஜினியின் 161-வது படம் என்று முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம், தற்போது 164-வது படமாக மாறியுள்ளது. 

இந்தக் குழப்பத்துக்குக் காரணம், தனுஷின் ட்வீட்கள். 

நேற்று இப்படம் குறித்து ட்வீட் செய்த தனுஷ், தலைவரின் 161-வது படத்தின் தலைப்பு நாளை வெளியிடப்படும் என்று அறிவித்தார். 

ஆனால் இன்று படத்தின் தலைப்பை வெளியிடும்போது, ரஜினியின் 164-வது படம் என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ். இதனால் காலா படம் ரஜினியின் எத்தனையாவது படம் என்கிற குழப்பம் தனுஷின் வெவ்வேறு விதமான ட்வீட்களால் உருவாகியுள்ளது.

கிரிக்கெட் போன்று திரைப்படங்களுக்கென சரியான புள்ளிவிவரங்கள் இருப்பதில்லை. நடிகர்களும் தாங்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால்தான் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.