முகப்பு
செய்திகள்

சென்னை திரையரங்கில் பாகுபலி 2 படம் நிகழ்த்திய சாதனை!

சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கத்தில் பாகுபலி 2 படம் முக்கிய சாதனை ஒன்று புரிந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:37 PM
பகிர்:

சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கத்தில் பாகுபலி 2 படம் முக்கிய சாதனை ஒன்று புரிந்துள்ளது.

இதுவரை அந்தத் திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த படமாக எந்திரன் இருந்தது. இப்போது அதை பாகுபலி 2 முறியடித்துள்ளதாக அந்தத் திரையரங்கின் இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 4 வாரங்களைக் கடந்து அத்திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாகுபலி 2 படம்.

கடந்த சில வருடங்களாக குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிக நாள்கள் ஓடிய, அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட படங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்கில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள இதர திரையரங்குகளிலும் பாகுபலி 2 படம் இதுபோன்ற சாதனைகளைப் படைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டுவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.