முகப்பு
செய்திகள்

'காலா'வில் ரஜினியின் சக நடிகர்கள் யார் யார்? வெளியானது அதிகாரப்பூர்வ  பட்டியல்! 

நடிகர் ரஜினிகாந்தின் 'காலா' திரைப்படத்தில் அவரோடு நடிக்கும் சக நடிகர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

Updated On : 28 மே, 2017 at 7:44 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:07 PM

மும்பை: நடிகர் ரஜினிகாந்தின் 'காலா' திரைப்படத்தில் அவரோடு நடிக்கும் சக நடிகர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

கபாலிக்கு பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் 'காலா' . இந்த படத்தினை ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.  ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.''காலா ' படப்பிடிப்பானது இன்று காலை சிறு பூஜையுடன் தொடங்கியது

இந்த படத்தில் ரஜினியோடு நடிக்கவிருப்பவர்களை இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிக்காமல் இருந்து வந்தது. தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

Advertisement

அந்த பட்டியல் பின்வருமாறு:

யூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இப்படத்துக்கு கபிலன், உமாதேவி ஆகிய இருவரும் பாடல்களை எழுதுகிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா என தொழில்நுட்ப குழுவினரையும் படக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.