முகப்பு
செய்திகள்

தமிழில் கமல், தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர்!

ஜூனியர் என் டி ஆர் தான் தெலுங்கு பிக் பாஸ் ஹோஸ்ட் என்று உறுதியாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள் ‘ஸ்டார் மா’ தொலைக்காட்சி வட்டாரத்தில்

Updated On : 30 மே, 2017 at 11:45 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:08 PM

தமிழில் விஜய் தொலைக்காட்சி கமலை வைத்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கச்சேரி களை கட்டிக் கொண்டிருக்கும் போது அக்கட பூமியில் மட்டும் சும்மா இருந்து விடுவார்களா? அங்கேயும் ‘பிக் பாஸ்’ வரப் போகிறதாம். அங்கே நிகழ்ச்சியை நடத்தித் தர இருப்பது ஜூனியர் என் டி ஆர் என்பதாக ஒரு பேச்சிருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் ஜூனியர் என் டி ஆர் தான் தெலுங்கு பிக் பாஸ் ஹோஸ்ட் என்று உறுதியாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள் ‘ஸ்டார் மா’ தொலைக்காட்சி வட்டாரத்தில். 

தனது முந்தைய திரைப்படமான ‘ஜனதா கரேஜில்’ வசூல் ரீதியாக் மட்டுமன்றி நடிப்பிலும் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ள ஜூனியர் என் டி ஆர் தற்போது தனது சகோதரர் கல்யாண் ராம் தயாரிப்பில் ‘லவ குசா’ திரைப்படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவற்றை முடித்து விட்டு ஜூனியர் என் டி ஆர், ஸ்டார் மா தொலைக்காட்சிக்காக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.