செய்திகள்

கமல்ஹாசனை டீஸர் மூலம் விமரிசனம் செய்தாரா வெங்கட் பிரபு?

DIN

இன்று (நவம்பர் 7, 2017) உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமலஹாசனின் 63-வது பிறந்த தினம். கமல் ஹாஸன் 1954-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தான் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையுடன் கமல்  தனது டிவிட்டரில் பல காத்திரமான பதிவுகளை எழுதி வருகிறார். சமீபத்தில் அவர் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அதற்கான  ஒத்திகையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க கமல் மொபைல் ஆப் ஒன்றை இன்று அறிமுகப்படுத்துகிறார். நற்பணி இயக்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை அவர் துவக்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு  செய்தபின்னர் பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறார்.

தனது  பிறந்த நாளான இன்று கமல் நற்பணி மன்றமாக இயங்கும் தமது ரசிகர்களைச் சந்தித்து பேசவிருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும், நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. 

நடிகர் சந்திரன் கமல் ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நடிகர் வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே,நகர் படத்தின் டீஸரில் வரும் வசனம் ஒன்று இவ்வாறு உள்ளது 'நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா?’ இது மறைமுகமாக கமலைக் குறிப்பிடுகிறதோ என்று எண்ணிய சந்திரன் தனது டிவிட்டரில் வெங்கட் பிரபுவுக்கு கண்டனம் தெரிவித்தார். ‘ஒரு பக்கம் RK நகர் டீஸர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?" என சந்திரன் கோபமாக பதிவிட்டதற்கு வெங்கட் பிரபு ப்ரோ அவசரப்பட்டு எதையும் முடிவு செய்ய வேண்டாம், நாளை பேசிக் கொள்ளலாம்’ என்று பதில் டீவிட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT