முகப்பு
செய்திகள்

வைரலாகும் சுஷ்மிதா சென்னின் புகைப்படம்!

42 வயதிலும் அழகிய தோற்றத்துக்குச் சொந்தக்காரர் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். தமிழிலும்

Updated On : 9 நவம்பர், 2017 at 3:22 PM
பகிர்:

41 வயதிலும் இளமைத் தோற்றத்துக்குச் சொந்தக்காரர் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கும் அவரை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். உடல் எடையை பராமரிப்பதில் சுஷ்மிதா சென் எப்போதும் கவனமாக இருப்பார். சமீபத்தில் இவர் ஆப்ஸ் வொர்க் அவுட் (Abs Work out)செய்த போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில மணி நேரத்தில் அது வைரலானது.

ஃப்ரனிச்சர் கடையொன்றின் திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக சுஷ்மிதா சென் ஷார்ஜா சென்றுள்ளார். தொடர் பயணத்தில் இருக்கும் அவர் தனது புதிய வொர்க் அவுட் ஃபோட்டோவைப் பற்றிக் கூறுகையில், ‘பயணங்களுக்கு நடுவே மீண்டும் வொர்க் அவுட்டை தொடங்கிவிட்டேன். எனது 42 பிறந்த தின மாதத்தில் இந்தப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இத்தனை விரைவாக உடல் இளைக்க முடியாது என்று சிலர் குறை கூறலாம். ஆனால் நான் தொடர்ந்து வொர்க் அவுட் செய்து என் பிறந்த நாளுக்குள் உடலை கச்சிதமாக வைத்திருப்பேன். என்னுடைய உடல் என்னுடைய விதிமுறைகள். இதில் யார் என்ன சொல்வது? என் முகத்திலும் சரி உடலிலும் சரி அதன் ஒவ்வொரு நுனியையும் நான் கொண்டாடுகிறேன்...அவை முற்றிலும் எனக்குரியவை’ என்று பதிவு செய்திருந்தார். 

சுஷ்மிதாவின் இந்தக் கருத்துக்கு 95,274 லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் பாராட்டுரைகளும் குவிந்து வருகிறது. அவருடைய புகைப்படமும் தன்னுடல் சார்ந்து அவர் கூறிய விஷயங்களும் நெட்டிசன்களிடையே வைரலாகி விட்டது. சுஷ்மிதாவின் பிறந்த நாள் நவம்பர் 19 என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.