முகப்பு
செய்திகள்

சாய்ரத் ரீமேக்கில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறாரா?

இப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கரண் ஜோஹர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான விரைவில் வெளிவரும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

ஆணவக் கொலைகளை எதிர்த்து வெளிவந்துள்ள படங்களில் ரசிகர்களின் மனத்தை விட்டகலாத மராத்தியப் படம் ‘சாய்ரத்’.

பாலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா உலகையும் அதிரச் செய்தது இந்தப் படம். ‘சாய்ரத்’ கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. `லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவிருக்கிறார். புதுமுகங்களையே நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்நிலையில் சாய்ரத் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகிறார் என்ற தகவல் சமீபமாக பாலிவுட்டில் பரபரப்பான செய்தியாக இருக்கிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிக்கவிருக்கிறார். மேலும் ஜான்வியின் நடிப்பில் மூன்று படங்களை கரண் தயாரிக்கிறார் என்றும் ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஜான்விக்கு தற்போது இருபது வயதாகிறது. சாய்ரத் படத்தில் இவருக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பியும், நடிகருமான இஷான் கட்டார் நடிக்கவிருக்கிறார்.

தடக் (Dhadak) என்று தலைப்பில் உருவாகவிருக்கும் இந்தி சாய்ரத்தை ஷஷாங் கைதான் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

சாய்ரத் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மஹாராஷ்ட்ராவில் படம்பிடிக்கப்பட்டது. ரீமேக் படமான தடக், ஹரியானாவில் படமாக்கமாக்கம் செய்யப்படுமாம். சாய்ரத் படத்தின் இசைப்பாளர்களான அஜய்-அதுல் இரட்டையர்களே இப்படத்துக்கும் இசையமைகக்விருக்கிறார்கள். 

இப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கரண் ஜோஹர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான விரைவில் வெளிவரும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.