செய்திகள்

அறம் இரண்டாம் பாகத்தை இயக்க கோபி நைனார் தயாராகிவிட்டாரா?

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, நயன்தாரா நடிப்பில் வெற்றி நடைபோடும் அறம் திரைப்படம் ரசிகர்களிடையே

ENS

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, நயன்தாரா நடிப்பில் வெற்றி நடைபோடும் அறம் திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூகம் சார்ந்த  இத்தகைய வலுவான கதையைத் தமிழ்த் திரையில் பார்ப்பது அரிது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ராஜேஷ் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

படத்தின் முடிவில் நயன்தாரா அடுத்த கட்ட போராட்டத்துக்குத் தயாராவது போன்றே முடிந்துள்ளதால், இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக இன்னும் தீவிரத்தன்மையுடன் இருக்கும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அறம் பட இயக்குநர் கோபி நைனார் கூறுகையில், ‘அறம் இரண்டாம் பாகத்தை எழுதி இயக்குவது என்பதை ஏற்கனவே முடிவு செய்த விஷயம் தான்.  திரைக்கதை முடிவடையும் நிலையில் உள்ளது’ என்றார். 

இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடிப்பாரா என்று கேட்டதற்கு ஒரு வாரத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றார்.

முதல் பாகத்தை விடவும் இந்தப் படம் மிகவும் காத்திரமான கதையம்சம் கொண்டது என்றும், படப்பிடிப்பு ஜனவரி 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT