செய்திகள்

அன்னபூர்ணா ஸ்டூயோவில் தீ விபத்து!

DIN

டோலிவுட்டில் பிரபலமான பஞ்சார ஹில்ஸில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்றரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான ஸ்டூடியோ இது. இந்தப் பயங்கர தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு ஒருவரும் இல்லை என்பதால் உயிரிழப்புக்கள் இல்லை.

இது குறித்து ஹைதராபாத் தீயணைப்பு அதிகாரியான பிரபாகர் ரெட்டி கூறியது, ‘மாலை 6.15 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, பயங்கரமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததது. அருகில் இருந்த மற்ற இரண்டு செட்டுகளிலும் தீ பரவிவிட்டது. இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னரே நெருப்பை அணைக்க முடிந்தது’ என்றார்.

காலம் சென்ற நடிகர் நாகேஸ்வர ராவ் அகினேனி 1975-ம் ஆண்டு தொடங்கிய அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் டோலிவுட்டில் பிரம்மாண்டமானது. சவுண்ட் ஸ்டேஜ்,  வெளிப்புறக் காட்சிகளுக்குத் தேவையான செட்டுகள், டப்பிங், டிஜிடல் சவுண்ட் போன்ற படத் தயாரிப்பு சார்ந்த பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ஸ்டூடியோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT