முகப்பு
செய்திகள்

ஆந்திர அரசின் விருதுகள்: டிவிட்டரில் அன்பு மழையினைப் பரிமாறிக் கொண்ட ரஜினி, கமல்! 

நேற்று அறிவிக்கப்பட்ட ஆந்திர அரசின் சிறப்பு சினிமா விருதுகளைத் தொடர்ந்து, நடிகர்கள் ரஜினி,கமல் இருவரும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.   

Updated On : 15 நவம்பர், 2017 at 1:06 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:37 PM

சென்னை: நேற்று அறிவிக்கப்பட்ட ஆந்திர அரசின் சிறப்பு சினிமா விருதுகளைத் தொடர்ந்து, நடிகர்கள் ரஜினி,கமல் இருவரும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.   

2016-ஆம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இவற்றில் திரைப்பட உலகிற்கு சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரும், மறைந்த அம்மாநில முதல்வரான என்.டி.ராமராவ் பெயரில் ‘என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள்’ வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வரிசையில் 2016-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந் இருவருக்கும் அறிவிக்கப்பட்டன.

Advertisement

அதனைத் தொடர்ந்து நடிகர் கமல் விருது பெற்றமைக்காக ரஜினியை வாழ்த்தும் பொருட்டு, 'என்.டி.ஆர் தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் மரியாதை செய்ததற்காக ஆந்திராவுக்கு நன்றி.  மீண்டும் ஒரு முறை இது நடந்துள்ளது. எனது சினிமா வாழ்வின் துவக்கத்திலிருந்து தொடரும் உங்களது ஆதரவுக்கு மனப்பூர்வமாக நன்றிக்கடன் பட்டுளேன்.' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  

அதற்கு உடனடியாக நடிகர் ரஜினிகாந்த், 'நன்றி கமல்..உங்களையும் வாழ்த்துகிறேன்.வாழ்த்துகள்' என்று பதில் தெரிவித்திருந்தார்.

தலைமுறைகளைத் தாண்டியும் தொடரும் இந்த இருவரின் நட்பானது அவர்தம் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.