ஹிப்ஹாப் தமிழா-வின் திருமண நிச்சயதார்த்தம் திருப்பதியில் நடைபெற்றது! (படங்கள்)
மணமகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதால் பலரும் புகைப்படங்களை முன்வைத்து...
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழாவின் (ஆதி) திருமணம் நிச்சயதார்த்தம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.
இனிமேல் நான் சிங்கிள் கிடையாது. அனைவருடைய ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி என்று ட்விட்டரில் ஹிப்ஹாப் தமிழா இதுகுறித்து எழுதியுள்ளார்.
இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
மணமகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதால் பலரும் புகைப்படங்களை முன்வைத்து ஹிப்ஹாப் தமிழாவுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.