முகப்பு
செய்திகள்

இன்று இரண்டு படங்கள் வெளியீடு!

வியாழக்கிழமையன்று படங்கள் வெளியாவது இயல்பாகிவிட்டது. அதன் அடிப்படையில் இன்று இரு படங்கள் வெளியாகியுள்ளன...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

வியாழக்கிழமையன்று படங்கள் வெளியாவது இயல்பாகிவிட்டது. அதன் அடிப்படையில் இன்று இரு படங்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாதுரை திருட்டுப்பயலே 2.

விஜய் ஆண்டனி, டயனா, மஹிமா ராதா ரவி நடிப்பில் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - அண்ணா துரை. தயாரிப்பு - ராதிகா சரத்குமார் & ஃபாத்திமா விஜய் ஆண்டனி. இந்தப் படம் தெலுங்கில் இந்திரசேனே என்கிற பெயரில் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துள்ளார். பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.

இரு படங்களும் தமிழ்நாட்டில் 350 திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.