செய்திகள்

பரத் நடிக்கும் பேய்ப் படம் ‘பொட்டு’

வெற்றி பெற்ற படங்களான மைனா, சாட்டை, மொசக்குட்டி போன்ற படங்களைத் தயாரித்த

DIN

வெற்றி பெற்ற படங்களான மைனா, சாட்டை, மொசக்குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’. இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ஸ்பைடர் படத்தில் பரத்தின் கதாபாத்திரம் சிறிய அளவில் இருந்தாலும் பேசப்பட்டது.

பொட்டு திரைப்படத்தைப் பொருத்தவரையில் முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தைப் பற்றி பரத் கூறியது, ‘இந்தப் படத்தில் நான் மருத்துவக் கல்லூரி மாணவன், மந்திரவாதி, பெண் வேடம் என மூன்று வெவ்வேறு வேடத்தில் நடிக்கிறேன். தமிழில் பொட்டு என்ற பெயரிலும், தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும், இந்தியில்  பிந்தி என்ற பெயரிலும் படம் வெளியாக உள்ளது. இதில் என்னுடன் நமீதா, இனியா, சிருஷ்டி தாங்கே, ஊர்வசி, தம்பி ராமைய்யா, பரணி, ராஜேந்திரன், நிகேஷ்ராம், மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பொதுவாக பெண்கள் வெளியே கிளம்பும் போது லேட்டாகக் கிளம்புகிறார்கள் என்று சொல்வோம். அதற்கான காரணம் பெண் வேடம்  போடும் போது தான் தெரிகிறது. இப்போது நான் பெண் வேடத்தில் நடிக்கும் போது மேக்கப் மேன் என்னிடம் எல்லாம் சரியாக உள்ளது என்று சொன்னாலும் எனக்கு திருப்தி வரும் வரைக்கும் சரி செய்துவிட்டுத் தான் ஷாட்டுக்குப் போவேன்’என்று கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT