செய்திகள்

ரஜினி பேரவை என்ற பெயரில் புதிய இணையதளம் தொடக்கம்!

DIN

சமீபத்தில் ரஜினியின் ஆதரவாளர்கள், ‘ரஜினி பேரவை’ www.rajiniperavai.org என்ற பெயரில் இணையதளம் ஒன்றினை துவங்கியுள்ளனர். இந்த இணையதளத்தில், சமூக மாற்றத்தை விரும்பும் மக்கள், பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் உங்களுடைய பெயர், மின்னஞ்சல், செல்போன் நம்பர் உள்ளிட்ட சுயவிபரங்களைப் பதிவிட்டால், ஒரு பாஸ்வேர்டு எண் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும். ஒன் டைம் பாஸ்வேர்டான அதனை மீண்டும் பதிவிட்டு, ரஜினி பேரவையில் நீங்கள் உறுப்பினர் ஆகிவிடலாம். மேலும், ரஜினி பேரவை என்ற பெயரில் மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் லோகோ (Logo) பாபா முத்திரையை குறிக்கும்படி அமைந்துள்ளது. அதன் முகப்புப் பக்கத்தில் லோகோவுடன் ஒரு செய்தியும் உள்ளது -

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இது நமது மக்கள் பணிக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட ஆக்கப்பூர்வ சேவை. நமது ஆடியோ, வீடியோ மற்றும் உரை சம்பந்தமான தொகுப்புக்களை இங்கே பார்க்கவோ, கேட்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். தங்களது கருத்துக்களை நீங்கள் இங்கு எழுதி வைக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். எமது ஊடக மேலாண்மைக்குழு தங்களது கருத்துக்களை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ந்து முடிந்தவரையில் உரிய பதிலை தங்களுக்கு வழங்கும். நமது இந்த முயற்சி வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். 

நன்றி! வணக்கம்!

இந்த இணையதளத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கு நான்கு மொபைல் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 20 நண்பர்களைச் சேர்க்கலாம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்பான சிறு முயற்சியாக இது கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT