செய்திகள்

'சபாஷ் நாயுடு' முடித்துவிட்டுதான் 'இந்தியன் 2'-வில் நடிப்பேன்! கமல் அறிவிப்பு!

IANS

'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு முடிந்தவுடன்தான் இந்தியன் 2-வில் நடிப்பேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கமல். 

கமல் தற்போது நடித்துவரும் நகைச்சுவைப் படமான சபாஷ் நாயுடுவின் படப்படிப்பை முடித்த பின்னர்தான் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்தியன் 2-வை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். கமலும் ஷங்கரும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இணைந்து பணி புரியும் படம் இது. இந்தியன் 2 படப்படிப்பு 2018 - ம் ஆண்டின் நடுவில் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'பிக்பாஸ் பாஸ்' நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இம்மாதம் சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பை தொடரவிருக்கிறார் கமல். நீண்ட காலமாக தாமதமாகிக் கொண்டிருக்கும் விஸ்வரூபம் 2 படத்தையும் விரைவில் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். ஒரு சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் விஸ்வரூபம் 2-வை வெளியிட கமல் முயற்சி செய்துவருகிறார். 
 
கடந்த ஆண்டு கமல் தனது அலுவலகப் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து கால்களை முறித்துக் கொண்டதால், சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. சபாஷ் நாயுடு பாத்திரம் கமலின் தசாவதாரம் படத்தில் வரும் பலராம நாயுடு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகும். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் மற்றும் சௌரப் சுக்லா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமல் அறிவித்திருந்த இருமொழியில் தான் நடிக்கவிருக்கும் அரசியல் திரில்லர் படமான 'தலைவன் இருக்கிறான்' பற்றிய புதிய தகவல்கள் இதுவரை அவர் வெளியிடவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT