பிரியதர்ஷினி இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கும் ‘சக்தி’!
பிரியதர்ஷினி இயக்கத்தில் நடிகை வரலட்சுமி மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு சக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...
பிரியதர்ஷினி இயக்கத்தில் நடிகை வரலட்சுமி மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு சக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது. இதனால் மூன்று மொழிகளுக்கும் உண்டான மூன்று விதமான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. பிரியதர்ஷினி, மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.