செய்திகள்

நடிகை சமந்தா - நாக சைதன்யா காதல் ஜோடிக்கு கோவாவில் திருமணம்! நாளை நடைபெறுகிறது!

100 விருந்தினர்களைக் கொண்டு நடத்தப்படும் எளிமையான திருமணம் இது...

எழில்

அக்டோபர் 6. கோவா.

நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா திருமணம்.

100 பேர்களுக்கு (மட்டும்) அழைப்பு. திருமண பட்ஜெட் - ரூ. 10 கோடி!

நாளை ஹிந்து முறைப்படியும் அடுத்த நாள் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம். 

தென்னிந்தியத் திரையுலகம் எதிர்பார்க்கும் மிகப் பெரிய திருமணத்தின் அட்டவணை இதுதான். 

திருமணம் குறித்து நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜூனா கூறியதாவது: எங்கள் மகனுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. எங்கள் குடும்பத்துக்கு இதை விடவும் வேறு மகிழ்ச்சி கிடையாது. 100 விருந்தினர்களைக் கொண்டு நடத்தப்படும் எளிமையான திருமணம் இது. முதல் திருமண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அடுத்த நிகழ்ச்சி சனியன்று நடைபெறும். இதற்குப் பிறகு ஹைதராபாத்தில் திருமணம் வரவேற்பு நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பிறகு இருவருமே படப்பிடிப்புகளில் மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் வசதிக்கேற்ப வரவேற்புத் தேதி முடிவு செய்யப்படும். 

Raju Gari Gadhi 2 படத்தில் நானும் சமந்தாவும் நடித்துள்ளோம். அந்தப் படம் தீபாவளி சமயத்தில் வெளிவரவுள்ளது. நான் சொல்லித்தான் சமந்தா அந்தப் படத்தில் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். அது உண்மையல்ல. நான் அவரைப் பரிந்துரைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திருமணத்துக்கு முன்பு பேய் வேடத்தில் அவர் நடிக்க நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT