செய்திகள்

வைரலாகும் சமந்தாவின் இந்தப் புகைப்படம்!

திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானதொரு நிகழ்வு. பிரபல நடிகை சமந்தாவுக்கு

DIN

திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானதொரு நிகழ்வு. நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை அவர் மணந்துள்ளார்.

கோவாவில் உள்ள டபிள்யூ என்கிற நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இரு குடும்பத்தாருக்கும் நெருக்கமான நூறு விருந்தினர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

நள்ளிரவு 11.52 மணிக்கு இந்துமுறைப்படி சமந்தாவின் கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். தாலி கட்டிய சில நொடிகளில் சமந்தா சந்தோஷத்தில் அழுதார். என்னதான் நடிகையாக இருந்தாலும், சினிமாவுக்காக பலவிதமான உணர்ச்சிகளை முக பாவத்தில் கொண்டு வருபவராக இருந்தாலும், தன்னுடைய திருமணம் என்று வரும் போது ஒரு சராசரி பெண்ணைப் போலத் தான் சமந்தாவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அழுதுள்ளார். சமந்தாவின் இந்த சந்தோஷக் கண்ணீர் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா நாக சைதன்யா தம்பதியரை ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT