முகப்பு
செய்திகள்

அழகுக் குட்டிச் செல்லம் மிஷா!

பத்மாவதி புகழ் நடிகர் ஷாகித் கபூர் சமீபத்தில் தனது செல்ல மகள் மிஷாவை மடியில் போட்டு தூங்க வைத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.  

Updated On : 15 அக்டோபர், 2017 at 3:24 PM
பகிர்:


பத்மாவதி புகழ் நடிகர் ஷாகித் கபூர் சமீபத்தில் தனது செல்ல மகள் மிஷாவை மடியில் போட்டு தூங்க வைத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.  

அப்பாவின் அரவணைப்பில் தூங்கிக் கொண்டிருக்கும் மிஷாவின் புகைப்படம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

சமீபத்தில் ஒரு வயது நிறைவடைந்த மிஷாவின் புகைப்படத்தை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார் ஷாகித்.

Advertisement

தந்தை மகள் உறவு என்பது உண்மையில் ஆனந்த யாழினினை மீட்டிச் செல்வது போன்ற ஒரு அற்புத உறவுதான். அம்மா மகன் உறவு கவிதை என்றால், தந்தை மகள் உறவு என்பது குறுங்கவிதை.

இந்தக் குட்டி தேவதைக்கு அவளது அப்பா பிரபலமான நடிகர் என்று தெரியாது. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் சதா சர்வ காலம் தன்னை நினைத்து தனக்காக ஓடோடி வரும் அன்பின் உருவம் மட்டுமே. 

ஷாகித் கபூர் மீரா தம்பதியரின் முதல் குழந்தை மிஷா பிறந்து ஆறு மாதம் வரை மீடியாவின் கண் படாமல் பொத்தி வைத்திருந்த ஷாகித், சமீபத்தில் மகளுடன் கழிக்கும் சில பொன்னான பொழுதுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றத் தொடங்கினார். அன்புத் தந்தையாக ஷாகித்தின் அத்தருணங்கள் மிக அழகானவை.

அவை வைரலாகி அவரது ரசிகர்கள் இடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.